இருக்கன்குடி ...ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!


விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமைந்துள்ள இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது.  அர்ச்சுனா, வைப்பாறு என இரு கங்கைகள் கூடும் இடத்தில் அம்மன் குடி கொண்டதால் இங்குள்ள மாரியம்மன் இருக்கங்(ன்)குடி மாரியம்மனாக போற்றப்படுகிறாள். வடக்கே அர்ச்சுனா நதியையும் தெற்கே வைப்பாற்றையும் எல்லையாக கொண்டு இடைப்பட்டிருக்கும் நிலப்பரப்பில் நடுநயமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் 10 அடி உயரமுள்ள கல்கோட்டைக்குள் அமைந்துள்ளது.

திருவிழா காலங்களான ஆடி, தை, பங்குனி கடைசி வெள்ளிக்கிழமைகளிலும், விஷேச நாட்களான சித்திரை வருடப்பிறப்பு, திபாவளி, திருக்கார்த்திகை உட்பட விஷேச நாட்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், விஷேச பூஜைகளும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதணைகள் நடத்தப்படும். தொடர்ந்து அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். இந்த திருவிழாவில் பங்குகொண்டு அம்மனின் அருளைப்பெற திரளான பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வருகிறார்கள்.



Leave a Comment