ஆடிக்கிருத்திகை ... திருத்தணிக்கு சிறப்பு பேருந்துகள்
திருத்தணி முருகன் கோவிலில் , ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
வரும், 4ல், ஆடிப்பரணியும், 5ல் ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழாவும், 6ல், இரண்டாம் நாள் தெப்ப திருவிழாவும், 7ல் மூன்றாம் நாள் தெப்பத் திருவிழாவுடன், நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
இதற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து, மூலவர் முருகப்பெருமானை தரிசிப்பர்.
பக்தர்கள் வசதிக்காக சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி, காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, திருச்சி, ஆந்திர மாநிலம், திருப்பதி, சித்துார், கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து, தமிழக அரசு போக்குவரத்து பணிமனை சார்பில், மொத்தம், 400 சிறப்பு பேருந்துகள் திருத்தணிக்கு இயக்கப்படுகின்றன.இந்த சிறப்பு பேருந்துகள், நாளை முதல், 8ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
நாளை முதல், 7 ம் தேதி வரை சென்னை சென்டரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் திருத்தணி ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டு சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகிறது.
Leave a Comment