திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் விஐபி பிரேக் தரிசனம்


திருப்பதி ஏழுமலையான் கோயிலை போலவே, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும் விஐபி பிரேக் தரிசன முறை அமல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி, தினமும் காலை 11.30 மணி முதல் 12 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 7.30 மணி வரையிலும் பக்தர்கள் தாயாரை தரிசிக்கலாம்.

காலை விஐபி பிரேக் தரிசனத்துக்கு காலை 8 மணிக்கும், இரவு தரிசனத்துக்கு மதியம் 3 மணிக்கும் கோயிலில் ஆதார் அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பக்தர், ரூ.250 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற வேண்டும்.

வழக்கம்போல தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 4.30 மணி வரை தாயாருக்கு குங்குமார்ச்சனை நடைபெறும். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். விஐபி பிரேக் தரிசனத்தையொட்டி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், அரை மணி நேரம் முன்னதாக, அதாவது காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 9 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.



Leave a Comment