திருப்பதி பிரம்மோற்சவம் அன்று... வாகன சேவையில் மாற்றம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளன. அதற்காக ரூ4.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிரம்மோற்சவத்தின்போது நடத்தப்பட உள்ள பெருமான் வாகனச் சேவையின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி காலை 9 மணி முதல் 11 மணி வரையும், இரவு 8 மணிமுதல் 10 மணி வரையும் வாகனச் சேவைகள் நடைபெற உள்ளன. கருட சேவை மாலை 7 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணி வரை நடைபெறும்.
பிரம்மோற்சவத்யொட்டி செப்டம்பர் 13ஆம் தேதி ஆந்திர அரசுத் தரப்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும் பிரம்மோற்சவ நாட்களில் விஐபி, மூத்தகுடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தரிசனங்கள் ரத்து செய்யப்படுகின்றன. தொடர்ந்து கருட சேவை நாட்களிலும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Leave a Comment