குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்...இன்று வீதிஉலா!


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பிரசித்திபெற்ற திருக்கோவில் உள்ளது. தசரா திருவிழாவுக்கு பெயர் பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கொடை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கொடை விழா நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது. இரவு 10 மணிக்கு வில்லிசை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்

விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை 9 மணிக்கு மகுட இசை, 10 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக அப்பகுதிமக்கள் இத்திருத்தலத்திற்கு வந்த வண்ணமுள்ளனர்.



Leave a Comment