ஆடி கிருத்திகையை முன்னிட்டு...திருத்தணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை!
ஆடிமாதத்தில் வரும் கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து கொண்டு அங்கு திருத்தணி சந்நிதானத்துக்கு செல்கின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கம்பைநல்லூர் அருகே இருமத்தூர் ஊராட்சி கொன்றம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து காவடி எடுத்து கொண்டும், அலகு குத்தி கொண்டும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக திருத்தணி புறப்பட்டு சென்றனர். திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், ஆற்காடு வழியாக 5 நாட்கள் நடைபயணமாக 250 கிமீ பயணம் செய்து திருத்தணி சென்றடைடைந்து முருகப்பெருமான் அருளைப் பெறவிருக்கின்றனர்.
Leave a Comment