சகல நன்மைகள் அளித்திடும்...குலசுந்தரி ஸ்லோகம்!


குலசுந்தரி என்பது குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவளாக இவள் போற்றப்படுகிறாள். பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரையொத்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள்.திருமேனி முழுவதும் திருவாபரணங்கள் துலங்க, கரங்களில் ஜபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், தாமரை, எழுத்தாணி, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள்.

ஸ்லோகம்:

ஓம் குலஸுந்தர்யை வித்மஹே

காமேஸ்வர்யை தீமஹி

தன்னோ சக்தி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச நவமி, கிருஷ்ண பட்ச சப்தமி.

இந்த தேவியின் அருளால் இவளை பூஜிப்பவர்கள் எல்லா நலனும். செல்வ வளமும், பெற்று சுபிட்சமாக வாழ்வார்கள்.



Leave a Comment