பார்த்தசாரதி கோவில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை!
திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவிலில் இன்று (31-07-2018) ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை நடைபெறுகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோவிலில் 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. இத்திருத்தலத்தில் எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு தேரோட்டிய சாரதி வடிவில் காட்சியளிக்கிறார். மேலும் இத்திருக்கோயிலில் திருமாலின் ஜந்து அவதாரங்களான நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர், மற்றும் கிருஷ்ணராக பெருமாள் அருள்பாலிக்கிறார். மேலும் இக்கோவிலில் வேதவள்ளி தாயார், ரங்கநாதர், ராமர், கஜேந்திர வரதராஜ சுவாமி, நரசிம்ம, ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன மேலும் இத்திருக்கோயில் வைகானச ஆகமத்தினையும் தென்கலையையும் பின்பற்றும் சிறப்புமிக்க தலமாகும். இங்கு பிரார்த்தனை செய்து மூலவரை வணங்கினால் தீராத நோய்கள் விலகி, வாழ்வில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்தகைய சிறப்புமிக்க இத்திருத்தலத்தில் ஆண்டாள் மூலவருக்கு இன்று (31-07-2018) திருமஞ்சன சேவை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆண்டாள் அம்மையாரின் அருளைப் பெறுவதற்கு ஏராளமான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்துள்ளனர்.
Leave a Comment