ஆடி அமாவாசை: சதுரகிரி மலைக்கு பக்தர்கள் அனுமதி
பேரையூர் வட்டம் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை விழா ஆகஸ்டு 11 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆகஸ்டு 8 முதல் ஆகஸ்டு 14 ஆம் தேதி வரை லட்சக்கணக்கானோர் மலையேறி சுவாமி தரிசனம் செய்வர். மேற்குறிப்பிட்ட நாள்களில் காலை 4 முதல் மாலை 4 மணி வரை மலையேற அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெரிசலைத் தவிர்ப்பதற்காக பக்தர்கள் வெள்ளைப்பாறை வழியாக சுந்தரமூர்த்தி சன்னதி சென்று சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசனம் செய்து பின்னர் புதிய பாதை வழியாக வெளியே வந்து சந்தன மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்துவிட்டு இரும்பும் பாலத்தின் வலதுபுறம் கீழே இறங்கும் வகையில் ஒருவழிப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Leave a Comment