சந்திர கிரகணம்... கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள்!


சந்திர கிரகணம் அன்று கடைபிடிக்கவேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்.

சூரியன்-பூமி-சந்திரன் மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய ஓளி சந்திரனுக்குச் செல்லாமல் பூமி மறைக்கும். இதனால் சந்திரனில் விழும் பூமியின் நிழலே சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது.

இது மிகப்பெரிய கிரகணமாக ஏறத்தாழ நள்ளிரவு 11.50 மணியிலிருந்து விடியற்காலை 3.50 மணிவரை நீடிக்கிறது. இதுவே இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணமாகும்.

கிரகணம் தொடங்குவதற்கு 2 மணிநேரம் முதல் எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது. கர்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது ஐதீகம்.

ஆலயங்கள் மூடியிருக்க வேண்டும், ஆலய தரிசனம் கூடாது.

வீட்டிலிருக்கும் உணவு பண்டங்களில் தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும். சந்திர கிரகண துதி, நவகிரக துதி பாராயணம் செய்யலாம்.

இவற்றை யார் வேண்டுமானாலும் வெறும் கண்களில் பார்க்கலாம். இவை வெறும் நிழல் ஆதலால், கதிர்வீச்சு ஏதும் ஏற்படாது.

சந்திர கிரகணத்துடன் நாளை செவ்வாய் கிரகமும் விண்ணில் தென்படும். இரண்டு கோள்களும் சிவப்பு வண்ணத்தில் தோற்றமளிக்கும்.

ஜோதிட சாஸ்திரப்படி கிரகணம் பிடிக்கும் நட்சத்தரமான திருவோணம் என்பர்.

ஏறத்தாழ அனைத்து நட்சத்திரத்திற்கும் தோஷம் என்று கூறுவர். இதற்காக சிறப்பு பூஜைகள், பரிகாரங்கள் ஏதும் செய்யத் தேவையில்லை. அருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்று வந்தாலே போதுமானது.

இரவு நிலவு வெளிச்சம் இருக்காது. இருண்ட பகுதிகளில் செல்வதை தவிர்க்கவும்.



Leave a Comment