தம்பதியர்களை இணைக்கும்...பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர்!
திருவையாறில் இருந்து வடக்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது பெரும்புலியூர். இங்கு அமைந்துளளது வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில். இத்தல வரலாறானது. சிவபெருமான் மேல் தீராத பக்தி கொண்டவர் புலிக்கால் முனிவர். இறைவனுக்கு எளிதாக பூப்பறிக்க தன் கால்களை புலிக்காலாக மாற்றிக் கொண்டதால் அவருக்கு இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இவர் ஐந்து தலங்களில் பூஜித்து அருள் பெற்றவர். பெரும் பெற்ற புலியூர் (சிதம்பரம்), எருகத்தம் புலியூர் (ராஜேந்திரபட்டினம்), ஓமாம் புலியூர், திருப்பாதிருபுலியூர் என்பன அவர் பூஜித்த நான்கு தலங்கள் ஆகும்
இந்த முனிவர் பூஜித்த ஐந்தாவது தலம்தான் பெரும்புலியூர். இத்தல மூலவராக வியாக்ரபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார். இறைவியின் திருநாமம் சவுந்திர நாயகி. ஆலயத்தின் கிழக்குப் பிரகாரத்தில் உமா சகித மூர்த்தியின் திருமேனிகள் உள்ளன. மேலும் இத்தல சிறப்பாக கணவன் பழக்க வழக்கங்கள் பிடிக்காமல் பிரிய நினைக்கும் பெண்கள் இத்திருத்தலத்திற்கு வந்து உமா சகித மூர்த்தியின் முன் நின்று மனமாற பிரார்த்தனை செய்து பூஜித்தால் மனைவியின் பிரார்த்தனை கேட்ப கணவன் திருந்தி மீண்டும் மனைவியுடன் அன்பாக இணைந்து வாழ்கிறார்கள். மேலும் இணைந்த தம்பதிகள் இந்த திருத்தலத்திற்கு வந்து உமா சமேத மூர்த்திக்கு அபிஷேக, ஆராதனை செய்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துகின்றனர்.
இத்திருத்தலத்தில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. வண்ணமயமாய் ஜொலிக்கும் கோபுரத்தைத் தாண்டினால் விசாலமான பிரகாரம் உள்ளது. பலிபீடம், நந்திமண்டபம், கொடிமரம் இவைகளை தாண்டியதும் அலங்கார மண்டபமும் இதை அடுத்து மகாமண்டபமும் உள்ளன. மகா மண்டபத்தின் நடுவே கருவறையின் எதிரே நந்தியும், பலி பீடமும் உள்ளன. மன ஒற்றுமைக்காக ஏங்கும் தம்பதிகள் இத்திருத்தலத்திற்கு வந்து இறைவனை பூஜித்தால் அவர்கள் வாழ்வில் இன்பம் பெருகுவது நிச்சயம்.
Leave a Comment