தாழங்குடா மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்!
கடலூர் தாழங்குடா பகுதியில் பிரசித்திப்பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதங்களில் இத்திருத்தலத்தில் செடல் உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு செடல் உற்சவ விழா கடந்த 19ம் தேதி கொடியேற்று விழா நடந்தது. இதை தொடர்ந்து காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று 6ம் நாள் திருவிழாவில் காவடி ஊர்வலம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து பெண்ணையாற்றில் காவடிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இரவில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் இன்று 26.07.18 நடக்கிறது. இதில் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கயிருக்கிறார்கள்.
Leave a Comment