கல்வி...கலைகளில் ஏற்றம் தரும் தாய் மூகாம்பிகை ஸ்லோகம்!


தாய் மூகாம்பிகையை மனதில் நினைத்து ஸ்லோகத்தை கூறி அம்பாளை பிரார்த்தித்து வந்தால் கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்கலாம்.

மூகாம்பிகா த்யானம்
பாஸ்வத் ரத்னாபரண வஸனாலங்க்ருதே சாரு ஹஸ்தை: சங்கம்
சக்ரம் வரதமபயம் ஸப்வஹந்தி த்ரிநேத்ரீ
ஹேம ப்ரக்யே ப்ரணதவர ஸந்தாத்ரீ பத்மாஸனஸ்தே
காருண்யார்த்ரே பகவதீ மஹாலக்ஷ்மி மாம் ரக்ஷ நித்யம்.
மூலம்
ஐம் கௌரி ஐம் கௌரி ஐம் பரமேஸ்வரி ஐம் ஸ்வாஹா

ஜொலிக்கும் ரத்னாபரணங்களை அணிந்து திருக்கரங்களில் சங்கு,சக்ரம், அபயம், வரம் தாங்கி முக்கண்கள் கொண்டு தங்கமயமாக பத்மாஸனத்தில் அமர்ந்தவளே, கருணையே வடிவாகத் திகழ்பவளே மகாலட்சுமி, சரஸ்வதி, பார்வதி எனும் முப்பெருந்தேவியரின் ஓருருவாய் அருட்காட்சியளிக்கும் பகவதியே என்னை தினமும் காத்தருள்வாய் தாயே. தாய் மூகாம்பிகையை நினைத்து இந்த ஸ்லோகத்தை கூறி அம்மனை பூஜித்து வந்தால் கல்வியிலும், கலைகளிலும், ஏற்றம் பெற்று வாழ்வு சிறப்படையும்.



Leave a Comment