புத்திர பாக்கியம் அருளும் ஆரணி புத்திரகாமேஸ்வரர்!
திருவண்ணாமலை மாவட்டம் அருகில் ஆரணியில் அமைந்துள்ளது. ஈசனின் திருப்பெயருடைய புத்திரகாமேஸ்வரர் திருத்தலம், இத்தலத்தின் இறைவியாக அம்பாள் பெரிய நாயகி வீற்றிருக்கிறாள். குழந்தையற்ற தம்பதியருக்கு குழந்தை பாக்கியத்தை தரும் தலமாக இக்கோவில் விளங்குகிறது. மேலும் தசரதனின் குலகுரு வசிஷ்டரின் ஆலோசனையின்படி தசரதன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, மகன்கள் பேறு பெற்ற தலம் என்று இத்திருத்தல வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் வடக்காக ஓடும் செய்யாற்றில் நீராடி அடுத்து சித்தர் வடிவில் தவக்கோலத்தில், தனிச் சந்நதியில் உள்ள தசரத மகாராஜாவை வணங்கி, பின்பு படித்துறை விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம் இக்கோவிலில் அரசுடன் வேம்பு இணைந்த மரத்தடியில் அநேக நாகர்கள் உள்ளனர்.
இவர்களை 108 முறை வலம் வந்தால் சகல நன்மைகள் கிடைக்கும் மற்றும் வில்வம், பவளமல்லி என இருதல விருட்சங்கள் உள்ள தலமாக இத்திருத்தலம் விளங்குகிறது. இங்கு 9 தலை கொண்ட நாகம் ஈசனுக்கு குடை பிடிக்கிறது. அதனையும் கண்டு பின்பு அம்பாள், ஈசன் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது இக்கோயில் மரபு. புத்திர பாக்கியம் அருளும் புத்திரகாமேஸ்வரரை தினசரி பக்தர்கள் பூஜித்து வருகிறார்கள்.
Leave a Comment