சங்கரன்கோவில் கோமதியம்மன் இன்று வெள்ளி சப்பரத்தில் வீதி உலா!
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சைவவைணவ தலங்களில் ஒன்றான சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஆடித்தவசு விழா ஒவ்வொரு ஆடி மாதம் தொடங்கி, தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இத்திருவிழா நாட்களில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை நேரங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும் இத்தகைய சிறப்புமிக்க ஆடித்தவசு விழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோமதி அம்பாள் சன்னதிக்கு முன்பு அமைந்துள்ள தங்ககொடிமரத்தில் காலை 8.15 மணிக்கு மேல் வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க வெண்பட்டு கொடியேற்றப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.
கோவிலில் கொடியேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து நாள்தோறும்அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறாள் அதன் தொடர்சியாக இன்று (21.07.2018) கோமதியம்மன் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 25ஆம் தேதி நடைப்பெறவிருக்கிறது ஆடித்தவசு விழா 27ஆம் தேதி முதல் காட்சி மாலை 5 மணிக்கும், இரண்டாம் காட்சி இரவு 9 மணிக்கும் நடைபெறுகிறது இந்த நாட்களில் அம்பாளை தரிசிப்பதற்காக எண்ணற்ற பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள்.
Leave a Comment