புதன் தோஷம் நீக்கும் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர்
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் சிவாலயம். மேலும் நவக்கிரகதலத்தில் இது புதனுக்கு உரிய தலமாக இத்திருக்கோயில் போற்றப்படுகிறது. புதன் தோஷம் உள்ளவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து புதனை வழிபட்டால் தோஷம் நீங்கி சுபிட்சம் பெருவார்கள் என்பது ஐதீகம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
இத்தல வரலாறானது. பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்த போது. சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அப்போது அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்த்தாக இத்தல வரலாறு கூறுகிறது. மேலும் இத்திருக்கோயிலின் மூலவருக்கு தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிஷேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகிறது.
மேலும் இத்திருக்கோயில் புதனுக்குரிய தலம் என்பதால் புதன் தோஷத்திற்குரிய பிரச்சணைகளான புற்றுநோய், வாதநோய், மனநோய், பிள்ளைகள் படிப்பில் ஈடுபாடு இல்லாமை, சீதள நோய், ஆண்மை குறைவு ஆகிய குறைபாடு உள்ளவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து புதனுக்கு பரிகார பூஜை செய்தால் வியாதிகள் நிவர்த்தியாகி வாழ்வில் சுபிட்சம் ஏற்படும் என்பது இங்குவரும் பக்தர்களின் நம்பிக்கை.
Leave a Comment