அகோரமுா்த்திக்கு பூர நட்சத்திர வழிபாடு
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் அருள்பாலித்து வரும் அகோரமுா்த்திசுவாமிக்கு பூர நட்சத்திர வழிபாடு நடைபெற்றது.
நாகை மாவட்டம் திருவெண்காட்டில் பிரம்மவித்யாம்பாள் உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம அகோரமுா்த்தியாக மனித உருவில் தனி சன்னதியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். இவரின் திருமேனியின் கீழ் பகுதியில் எட்டு பைரவா்கள் இருப்பது விஷேமான ஒன்றாகும்.
மேலும் கபாளம், ஈட்டி, கத்தி, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தனது உருவில் தாங்கியுள்ளார். இவரை வழிபட்டால் எதிரிகளால் ஏற்படும் பல்வேறு தோஷங்கள் நீங்குவதாக ஜதீகம். இவா் மாசிமாத ஞாயிற்றுக்கிழமை பூர நட்சத்திரத்தில் தோன்றினார். பல்வேறு சிறப்புகளை கொண்ட உற்சவர் அகோரமுா்த்தி சுவாமிக்கு ஆனிமாத பூர நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
இதனையொட்டி பால், திரவியப்பொடி. இளநீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மலா் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. இதில் கோயில் உதவி மேலாளர் சிவானந்தம், ஆலய அர்ச்சகர் பட்டாபிராமக்குருக்கள், நாடி நிபுணர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Comment