குரங்கணி முத்துமாலையம்மன் கோவில் உற்சவம்
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். ராவணன் சீதாதேவியை கடத்திச் சென்றபோது, சீதா தேவி ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள். புஷ்பக விமானத்தில் இருந்து வீசப்பட்ட முத்து மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. தரையில் விழுந்த முத்துமாலை ஜோதியாக ஒளி வீசியது. அப்போது அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர், முத்து மாலையின் ஒளி வீச்சை காண முடியாமல் கண்கள் கூச, அருகில் கிடந்த மண் சட்டியை எடுத்து அந்த முத்துமாலையை மூடினார் முத்துமாலை கிடந்த இடமானதால் இங்கு சீதா தேவி தங்கி இருப்பதாக நினைத்து அதற்கு முத்துமாலை அம்மன் என பெயரிட்டப்பட்டதாக இத்தல வரலாறு கூறப்பட்டுவருகிறது.
முத்துமாலையம்மன் சன்னிதியின் இடப்புறமும், வலப்புறமும் பரிவார மூர்த்திகளின் சன்னிதிகள் புடை சூழ அமைந்திருக்கின்றன. இதில் அம்மனுக்கு இடப்புறம் நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களின் கோபுரத்துடன் கூடிய சன்னிதி உள்ளது. முப்பிடாதி அம்மன், சப்த கன்னிகைகள், பார்வதி அம்மன், பிரம்ம சக்தி, மாரியம்மன், சந்தன மாரியம்மன், பைரவர், வீர பத்திரர் முதலியோருக்கு இங்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. மேலும் விநாயகர், காசிநாதர், விசாலாட்சி, நவக்கிரகங்கள் ஆகியோர் இங்கு அருள்பாலிக்க, மூலவராக முத்துமாலை அம்மன் கிழக்கு முகமாக அமர்ந்தபடி அருள்பாலிக்கிறாள்.
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா மிகச் சிறப்புவாய்ந்து. அதன்படி ஆனிமாத திங்கட்கிழமையான இன்று (09-07-2018)குரங்கணி முத்துமாலை அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைப்பெறயிருக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் அம்மன் உற்வலத்திற்கு ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு குரங்கணி அம்மன் அருளைப் பெறவிருக்கிறார்கள்.
Leave a Comment