எண்ணிய காரியம் ஈடேற சாய் விரதம்
ஸ்ரீ சாய் பாபா தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஆருளும் ஆசியும் வழங்குகிறார். அந்த மகானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமைகளில் காலையிலோ அல்லது மாலையிலோ வீட்டிலிருக்கும் பாபாவின் படத்திற்கு வாசைனை மிகுந்த மலர்களை சூட்டி, கற்கண்டு, பழங்கள், இனிப்புகளை படைத்து பிரசாதமாக வழங்க வேண்டும். அன்றைய ஆகாரமாக பழ, திரவிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். அப்படி செய்ய இயலாதவர்கள் ஏதாவது ஒருவேளை உணவு அருந்துதல் போதுமானது. நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இல்லாமல் மேற்கொண்டவாறு விரதமிருக்கலாம் வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாயிபாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தியுடன் கடைபிடிக்கலாம். தொடர்ந்து இது போன்று ஒன்பது வியாழக்கிழமை விரதமிருந்து கடைசி வாரமான அன்று குறைந்தளவு ஐந்து ஏழைகளுக்கு உணவளித்தல் வேண்டும். இவ்வாறு விரதம் இருக்கும் நாட்களில் "ஓம் ஸ்ரீ சாய் பக்த ரக்ஷாய் நமஹ" என்னும் சாய்பாபாவிற்குரிய இம் மந்திரத்தை உங்களால் முடிந்தபோதெல்லாம் 1008 முறை ஜெபித்து வந்தால், எண்ணிய காரியம் ஈடேறும் கருணைக்கடலான பாபாவின் ஆசியால் துன்பம் விலகி சகல சந்தோஷங்கள் பெருகும்.
Leave a Comment