ஜெனகை மாரியம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்
வைகையாற்றின் கீழ்கரையில் அமைந்துள்ள சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் குடிகொண்டிருக்கும் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவ சேவை இன்று நடைபெறுகிறது.சோழவந்தானில் புண்ணியதலமாக கருதப்படும் இக்கோவிலில் நடத்தப்படும் அணைத்து பூஜைகளிலும் வெற்றிலை முதன்மை பொருளாக கருதப்படுகிறது. மேலும், இத்திருத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈர ஆடையோடு அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொள்பவருக்கு அம்பாள் அணைத்து சௌபாக்கியங்களையும் வழங்கி அருள் பாலிக்கிறார்.
மேலும் இக்கோவிலில் தரப்படும் தீர்த்தமானது, மஞ்சள், வேப்பிலை மருத்துவ குணமும் அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும். அத்தீர்த்தம் தீராத வியாதகிளையும் தீர்கிறது என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.இத்தகைய சிறப்புகள் மிக்க இத்திருக்கோவிலில் இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், ஊஞ்சல் உற்சவ சேவையும் நடைபெற உள்ளது. இதில் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொண்டு ஜெனகை மாரியம்மனை தரிசிக்கவிருக்கிறார்கள்.
Leave a Comment