பார்த்தன்பள்ளி பெருமாள் கோயிலில் பிரமோற்சவம்
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே பார்த்தன்பள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ளது பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படும் இக்கோவில், திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் ஒன்றாக போற்றப்டுகிறது.பார்த்தனுக்காக (அர்ஜுனன்) உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியென்று பெயர்பெற்றது. இத்திருதலத்தில் பார்த்தசாரதி பெருமாளும், செங்கமலவள்ளி தாயார் சன்னதிகளும், கருடன், அர்ஜுனன், அனுமார் உபசன்னதிகளும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
இக்கோயிலில், பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடைபெறுவது வழக்கம். முக்கிய நிகழ்வாக ஆடி, அமாவாசை திருவிழாவும், திருக்கார்த்திகை திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. இத்திருதலத்தில் ஆனி மாத பிரமோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவையொட்டி பார்த்தசாரதி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்பு வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் ,பெருமாளுக்கு சேவை சாத்துமுறையும், திருமஞ்சனம் சாத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்று பக்தர்களை பரவசப்படுத்தியது. பிரமோற்சவத்தை முன்னிட்டு தொடர்ந்து 10 நாட்களுக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் பெருமாளை தரிசித்து திருவிழாவை சிறப்பிக்கயிருக்கிறார்கள்.
Leave a Comment