ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா


ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராமலிங்க பிரதிஷ்டை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உருவான சிறப்பை எடுத்துக் காட்டும் விதமாக ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ராமலிங்க பிரதிஷ்டை விழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, முதல் பிரகாரத்தில் உள்ள ராமநாதசுவாமி சன்னதியில் இருந்து சிவலிங்கத்தை அனுமன் வேடமணிந்தவர் எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதனையடுத்து சிவலிங்கத்திற்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின் மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், மேலாளர் முருகேசன், கண்காணிப்பாளர் ககாரின் ராஜ், பேஸ்கார்கள் அண்ணாத்துரை, கலைச்செல்வன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment