ராமேஸ்வரம் கோயிலில் புதிய தீர்த்தங்கள்


ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தீர்த்தங்கள் இடமாற்றம் செய்ய ஆறு புதிய தீர்த்த கிணறுகள் ஆகஸ்ட் மாதத்தில் பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.

ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயிலுக்குள் மகாலெட்சுமி, சாவித்திரி, காயத்தி, சரஸ்வதி, சங்கு, சக்கரம் என ஆறு தீர்த்தங்கள் குறுகிய பாதையில் உள்ளதால் பக்தர்கள் நீராடுவதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இக்கூட்ட நெரிலை தவிர்க்க 6 தீர்த்த கிணறுகளை மூடிவிட்டு இதற்கு பதிலாக கோயில் 2-ம் பிரகாரம் வடக்கில் ரூ.29 லட்சம் செலவில் கடந்தாண்டு 28-ல் பூமி பூஜையுடன் கிணறு தோண்டும் பணி துவங்கியது.

தற்போது தீர்த்த கிணறுகள் கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது. இதனைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆய்வு செய்த பின் ஆகஸ்ட்டில் பிரதிஷ்டை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



Leave a Comment