நத்தம் பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக் நகரிலுள்ள பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா 5 நாட்கள் நடந்தது.
இதையொட்டி கடந்த 14ம் தேதி கோவிலில் கொடியேற்றப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. 15ம் தேதி காலை கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து நத்தம் சந்தனக் கருப்பு கோவிலிலிருந்து கன்னிமார் தீர்த்தம் அழைத்து வந்து அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. 3ம் நாள் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று மாலை 108 திருவிளக்கு பூஜை நடந்தது.4ம் நாள் அம்மன் குளத்திலிருந்து பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம், சந்தனகுடம் போன்றவைகளை நேர்த்திக்கடனாக எடுத்து கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பின்னர் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அன்றிரவு அம்மன் மின் ரதத்தில் நகர் வலம் வந்தது. அப்போது பக்தர்கள் தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர். மறுநாள் காலை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து அரண்மனை பொங்கல், மாவிளக்கு வழிபாட்டுடன் அசோக் நகர் வீதிகளில் வலம் வந்து அம்மன் கோவிலை வந்தடைந்தது.
இதற்கான ஏற்பாடுகளை அசோக் நகர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Leave a Comment