திருப்பதியில் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்ய....


திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் நாள் தோரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

கட்டுக்கடங்காத கூட்டத்தால் இலவச தரிசம் செய்ய 20 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு கூட 4 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இப்படி பல மணி நேரம் கூண்டுகளில் அகப்பட்டு கிடப்பதை விட திருமலையில் ஏழுமலையனை 3 மணி நேரத்தில் தரிசிக்க முடியும். எப்படி என்கிறீர்காள? இதோ எளிய வழி...

இனி ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை கொண்டு சென்றால் போதும். நீங்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நேரத்தைக் குறித்துத் தந்துவிடுவார்கள். குறிப்பிட்ட நேரத்தில் 'நாராயணகிரி கார்டன் நுழைவு வாயிலு'க்குச் சென்றால் போதும். அதிகபட்சம் மூன்று மணி நேரத்தில் பெருமாளை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிவிடலாம்.

இந்த இலவச சர்வ தரிசன டோக்கன் முறை கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. திருப்பதி ரயில் நிலையம் அருகிலுள்ள விஷ்ணு நிவாசம், கோவிந்தராஜ சுவாமிசத்திரம், ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ், ஆர்.டி.சி பஸ் ஸ்டாண்டு, அலிபிரி ஆகிய இடங்களில் இதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன.



Leave a Comment