நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம்
நெல்லையப்பர் கோயிலில் 14 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அருள்மிகு நெல்லையப்பர் - காந்தியம்மன் கோயிலில் இன்று காலை 3 மணி முதல் 6 மணி வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
அதன்பின் பரிவார மூர்த்திகள் யாகசாலை பூஜை, நாடிசந்தானம், ஸபர்ஸாகுதி, மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் எழுந்தருளல் உள்ளிட்ட பூகைகளும் நடைபெற்றன. இதனையடுத்து காலை 9.30 மணி அளவில் நெல்லையப்பர், வேனுவனநாதர், காந்திமதி அம்பாள் மற்றும் ராஜகோபுரம், விமானங்கள், பிரதான மூர்த்திகள், சமஸ்த வேதமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு சுவாமி- அம்பாள் திருகல்யாணமும் மற்றும் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
Leave a Comment