"செட்டிப்பெண் மருத்துவம்" சித்திரைத் தேர் திருவிழா


தென்கைலாயம் என போற்றுதலுக்குரிய சிவ வழிபாடு ஆலயமாக மாநிலத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள "சிராப்பள்ளி" என அழைக்கப்படும் மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் உடனுறை மட்டுவார் குழலம்மை திருக்கோவில் சீர்மிகு சித்திரைத் தேர் திருவிழா முக்கிய நிகழ்வான "செட்டிப்பெண் மருத்துவம்" நிகழ்ச்சி மிகசிறப்பாக சிராப்பள்ளி தலத்தில் நடைப்பெற்றது.


சிராப்பள்ளி தலத்தில் "திருநாவுக்கரசர்" அருளிய பாடல் நினைவுக்கு வருகிறது..
தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய்ப்,
பேயனேனையும் ஆண்ட பெருந்தகை,
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய,
நாயனாரென நம்வினை நாசமே !!


"உள்ளத்தில் உயர்ந்த உள்ளம் தாயுள்ளம் என்பார்கள் " எல்லாம் வல்ல பரம்பொருளாகிய சிவபெருமான். சிராப்பள்ளியில் குன்றில் மேல் செவ்வந்திநாதராக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.. சிவவழிப்பாட்டில் நம்பிக்கையும், பக்தியும், கொண்டு வழிபடும் அடியவர்க்கு ஈசனே வந்து அருள் புரிவார் என்பது திண்ணம். அதன் படி செவ்வந்திநாதர் தம்மிடம் தீவிர பக்தி கொண்ட "ரெத்தினாவதி" செட்டிப் பெண்ணுக்கு அவரின் தாயாக வந்து பிரசவம் பார்த்து சுகப்பிரசவம் செய்து குழந்தை வரம் அருளினார் என்பது தல வரலாறு .. அப்படி தாயாக ஈசன் வரும் பொழுது அம்பாள் பார்வதியும், கங்கையும், பணிப் பெண்களாக வந்து அருள் புரிந்தனர் .

உண்மையான தாய் வந்தவுடன் தாயான ஈசன் "ரிஷபாரூடராய்" காட்சி தந்தார். இவ்வாறு செவ்வந்திநாதர் தாயாக வந்து அருள் புரிந்த ஐதீகம் . ஒவ்வொரு ஆண்டும் இத்திருதலத்தில் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவம் விழாவில் ஐந்தாம் நாள் விழாவில் செட்டிப் பெண் மருத்துவம் என்ற ஐதீக விழா நடைபெறுகின்றது .

காலை செட்டிப் பெண்ணுக்கு வளைகாப்பு இட்டு பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடைபெறும் .. பின்னர் ஐதீகம் செய்யப்பட்டு குழந்தை பிரசவம் நடைபெறும் . அன்று மாலை ரிஷப வாகனத்தில் தாயான ஈசன் காட்சி தந்து அறுபத்தி மூன்று நாயன் மார்களுடன் வீதி உலாவந்து பத்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார் .. தாயான ஈசனை வேண்டும் பக்தர்களுக்கு குறைவின்றி அருள் பாலித்து சுகப்பிரசவம் நடைபெறுகின்றது .. அன்றைய விழாவில் பக்தர்களுக்கு பிரசவ மருந்து வழங்கப்படும் .



Leave a Comment