சிராப்பள்ளி சித்திரைத் தேர் திருவிழா


தென்கைலாயம் என போற்றுதலுக்குரிய சிறந்த சிவ வழிபாடு ஆலயமாக மாநிலத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள "சிராப்பள்ளி" என அழைக்கப்படும் மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் உடனுறை மட்டுவார் குழலம்மை திருக்கோவில் சீர்மிகு சித்திரைத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது..


இந்த கொடியேற்ற திருநாளில் சிராப்பள்ளி தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய பாடல் நினைவுக்கு வருகிறது.
மந்தம் முழவம் மழலை ததும்ப வரைநீழல், செந்தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளிச், சுந்தம் மலர்கள் கடைமேலுடையார் விடையூரும், எந்தன் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே!


கொடி உயர கோ உயரும்! கோ உயர மக்கள் குடி உயரும் என அன்றைய கால சான்றோர்கள் கூறுவது வழக்கம்.
ஒரு நாட்டின் வளம், நலம், செல்வம், ஆகிய அனைத்திற்கும் அந்நாடு சிறந்து விளங்குமானால் அந்த நாட்டை "கொடி நீதி வழுவாத ஆட்சி" என்பார்கள். அது போல இறைவனுக்கும் கொடி மிகவும் முக்கியமானது.


பரம்பொருளாகிய "சிவபெருமானுக்கு இடபக்கொடியும்" சக்தி வடிவமாகிய "அம்பாளுக்கு சிம்மக்கொடியும்" விஷ்ணு வடிவமான "பெருமாளுக்கு கருடக்கொடியும்" அமைந்துள்ளது. இவற்றில் தனி அம்பாள் கோவில்களில் மட்டுமே தான் சிம்மக்கொடியேற்றப்படும். சிவாலயத்தில் உள்ள அம்பாளின் திருவிழா காலங்களில் ரிஷப கொடியேற்றப்படும்.


ஒரு ஆலயத்தின் திருவிழாவின் முதல் தொடக்க நாளில் கொடியேற்றம் நடைப்பெறுகிறது. கொடியேற்றப்பட்டு அன்று மாலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று. எட்டுதிக்கு என்ற அஷ்டதிக் பாலகர்களுக்கு பலியிட்டு தச கட்டு வைபவம் நடைப்பெறும்.
அப்படி செய்யும் பொழுது திருவிழா முடியும் வரை அந்த ஊரை காத்து திருவிழா நன்முறையில் நடைபெற நடக்கும் பூஜையாகும். ஒரு திருவிழாவில் கொடியேற்றம் என்பது மிகவும் முக்கியமானது நிகழ்வாகவே கோவில்களில் அமைக்கின்றது.



Leave a Comment