திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா....


தமிழகத்தில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு பொதுமக்கள் திருத்தலங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்குவர். அதிலும் சகல வசதியும் நிறைந்த திருமலை திருப்பதி கோயிலுக்கு வரு வோரின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகும். ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு பயன்படும் வகை யில் வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.


திருமலையில் தரிசன முறைகள் :

திருமலையில் திவ்ய தரிசனம், இலவச தரிசனம், சுதர்ஸன தரிசனம் மற்றும் சிறப்பு நுழைவு தரிசனம் ஆகிய தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன. இது தவிர கட்டண சேவை முறையும் உண்டு.


திவ்ய தரிசனம்:

இது திருப்பதியிலிருந்து நடைபாதை வழியாக நடந்து வருபவர்களுக்கு இலவசமாக கோயில் நிர்வாகத்தால் அளிக்கப்படும் தரிசனமாகும். இதில் திருப்பதியிலிருந்து அலி பிரி வழியாகவும், சீனிவாச மங்காபுரத்திலுள்ள ஸ்ரீ வாரி படிக்கட் டுகள் என இரண்டு வழியாகவும் செல்லலாம்.
அதிகாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் நடைபாதையில் பாதி தூரத்தில் கோயில் ஊழியர்களால் வழிபாட்டிற்கு செல்வத ற்கான சீட்டு வழங்கப்படும். அதனை எடுத்துச்சென்று திருமலை யில் நடந்து வரும் பக்தர்கள் சிறப்பு வழியில் சென்று வழி படலாம்.

இலவச தரிசனம்:

திருமலையில் கட்டணம் ஏதும் இல்லாமல் பக்தர்கள் வைகுண்டம் 1 வழியாக இலவசமாக தரிசிக்கும் முறை யாகும். இதில் பக்தர்கள் உள்ளே சென்ற உடன் அவர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்படும். இதில் தரிசன நேரம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. இந்த அட்டையை கொ ண்டு பக்தர்கள் காத்திருக்காமல் அதில் குறித்த நேரத்திற்கு வந் தால் போதுமானது.

சுதர்ஸன தரிசனம்:

இந்த தரிசனம் ரூ. 50 செலுத்திச் செல்லும் தரிசனமாகும். இது திருப்பதி மற்றும் எல்லா நகரங்களிலுள்ள திருமலை திருப்பதி தகவல் மையங்களிலும் விவரங்களை அளித்து பெற்றுக்கொள்ளலாம். இதில் தரிசனத்திற்குச் செல்வதற்கான நேரம் குறிக்கப்பட்டிரு ப்பதால், அந்த நேரத்தில் சென்று வழிபடலாம்.


சிறப்பு நுழைவு தரிசனம்:

இது ரூ. 300 செலுத்தி ஆன்லைன் மூலமாக பதிவு செய்து தரிசிக்கும் முறை. இதில் விரைவாக சென்று ஏழுமலையானை தரிசிக்கலாம்.
இது தவிர மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கோயி லின் எதிரே உள்ள வரிசையில் காத்திருந்தால், கோயில் ஊழியர்களால் மகா துவாரம் வழியாக வழிபாட்டிற்காக அழை த்துச் செல்லப்படுவர். இந்த முறை நாளொன்றுக்கு 4 முறை அனுமதி க்கப்படும். மேலும் 1 வருட கைக் குழந்தையை எடுத்து வரும் பெற்றோர் கோயிலின் அருகே உள்ள சுபதம் நுழைவாயில் வரிசையில் அனுமதிக்கப்படுவர்.


இது தவிர சில கட்டண சேவைகள் உள்ளன. இதில் கலந்து கொள் ள விரும்புவோர் திருமலையில் உள்ள விஜயா வங்கியில் சென்று கைரேகை மற்றும் அடையாள அட்டையைக் காட்டிப் பெற்றுக்கொள்ளலாம். இது குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங் கப்படும்.
மேற்கண்ட வழி முறைகளை பின் பற்றி திருமலையில் ஏழு மலையானை பக்தர்கள் வழிபடலாம். இதில் எந்த முறையில் சென்று வழிபட்டாலும் அவர்களுக்கு புகழ்பெற்ற பிரசாதமான லட்டுகள் கோயில் நிர்வாகத்தால் வழங்கப்படும்.


திருவேங்கடமலையானை தரிசிக்க எளிதாக்க இதோ சில குறிப்புக்கள்:

திருமலையை மேல் திருப்பதி என்றும் திருப்பதியை கீழ் திருப்பதி என்றும் அழைப்பார்கள். திருமலை திருப்பதிக்கு ஒருநாளைக்கு 50,000 முதல் ஒரு லட்சம் பக்தர்களுக்குமேல் வருகை புரிகிறார்கள்.
திருமலைக்கு செல்லும் முன்பே ரயில் மற்றும் பேருந்து டிக்கட்டுகள், தங்கும் வசதிகள் மற்றும் சேவை டிக்கட்டுகளுக்கு முன்பதிவு செய்து கொள்வது நல்லது.
தங்கும் வசதிக்காக உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் சி.ஆர்.ஓ அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நபர் மட்டும் க்யூவில் காத்திருக்கலாம். மற்றவர்கள் சி.ஆர்.ஓ. அலுவலத்துக்கு பக்கத்தில் உள்ள பயணிகள் தங்குமிடத்தில் தங்கி ஓய்வு எடுக்கலாம். அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும்.
தகவல்களை அறிந்துகொள்ள, ரயில்நிலையம், விமான நிலையம், ஆர்.டி.சி. பேருந்து நிலையம், அலிபிரி பேருந்து நிலையம், சத்திரங்கள், அலிபிரி டோல்கேட், மற்றும் ரேணிகுண்டா ரயில்நிலையத்தில் உள்ள தகவல் மையங்களை அணுகலாம்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் , மலைப்பாதையில் பழுதடையும் வாகனங்களை சரிபார்ப்பதற்கு ரோந்து பழுதுபார்ப்பு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
திருமலைக்கு நடந்து செல்பவர்களுக்கு வசதியாக திருப்பதி ரயில்நிலையத்திலிருந்து அலிபிரி வரை இலவசப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நடந்து செல்லும் யாத்திரிகர்கள் தங்கள் உடைமைகளை அலிபிரி அடிவாரத்தில் உள்ள கௌண்டரில் செலுத்திவிட்டு மலை ஏறிச்சென்று திருமலை சி.ஆர்.ஓ. அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் இலவசமாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
திருமலை யாத்திரையை பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் இல்லாமல், வார நாட்களில் பயணம் இருப்பது போல் திட்டமிட்டுக்கொண்டால், எளிதாக சுவாமி தரிசனம் செய்து, பயணத்தை இனிதானதாக ஆக்கலாம்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் திருமலை தேவஸ்தான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. திருமலையில் அறை எடுத்து தங்கும் வசதியைப் பெற, கணவன் மனைவி இருவரும் செல்ல வேண்டும். தனிநபராக செல்பவருக்கு அறைகள் தரப்படுவதில்லை.
திருமலையில் அறைவசதி கிடைக்காவிட்டாலும், நாம் கொண்டு செல்லும் பொருட்களை வைப்பதற்கு ஆயிரக்கணக்கான இலவச லாக்கர் வசதிகள் உள்ளன. அதில் நமது பொருட்களை வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யலாம்.
கீழ்த்திருப்பதி வந்தவுடன் அங்குள்ள லாக்கர்களில் பொருட்களை வைத்து விட்டு, அலர்மேலு மங்காபுரம், கோவிந்தராஜப் பெருமாளை தரிசித்து விட்டு, மேல் திருப்பதியில், சுவாமி வெங்கடாசலபதியை வழிபடுவதற்கு முன், சுவாமி புஷ்கர்ணி தீர்த்தத்தில் புனித நீராடி வராகப் பெருமாளைத் தரிசனம் செய்ய வேண்டும்.
திருமலை யாத்திரையின்போது அளவுக்கதிகமான நகைகளையோ, பணத்தையோ உடன் எடுத்துச்செல்லக் கூடாது. முன்பின் அறியாதவர்களிடம் தங்குவதற்கு அறைகள் கேட்கக் கூடாது. முன்பின் அறியாதவர்களை உங்கள் அறையிலும் தங்க வைக்கக்கூடாது.
கோயில் மற்றும் உங்கள் வழிபாடு தொடர்பான தகவல்களுக்குத் திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் ஏதேனும் ஒன்றைத் தொடர்பு கொள்வது அல்லது http://www.tirumala.org/ இணையதளத்தின் வழியாக அறியலாம்.

பார்த்து ரசிக்க வேண்டிய சிறப்பம்சங்கள்

பிரதானக்கோயிலான திருப்பதி மலைக்கோயில் மட்டுமல்லாமல் இங்கு வராகஸ்வாமி கோயில், வெங்கடேஸ்வரஸ்வாமி கோயில், பத்மாவதி கோயில், கோவிந்தராஜா கோயில், சீனிவாசமங்காபுரம் போன்ற ஏனைய முக்கியமான ஆலயங்களும் இந்நகரில் அமைந்துள்ளன.
ஆன்மீக அம்சங்களை தரிசித்தபின் பயணிகள் இங்குள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவிற்கும் விஜயம் செய்யலாம். இங்கு பலவகை விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன. ஷிலாத்தோரணம் என்றழைக்கப்படும் பாறைத்தோட்டமும் அவசியம் பார்க்க வேண்டிய அம்சமாகும்.
திருப்பதியில் சர்க்கரை பொங்கல் மற்றும் திருப்பதி லட்டு போன்றவற்றை சுவைக்காமல் திரும்பக்கூடாது என்பது பயணிகளும் பக்தர்களும் நன்கு அறிந்ததே. ஆந்திர மற்றும் தமிழக உணவுமுறைகளின் கதம்பமான அம்சங்கள் திருப்பதி உணவுவகைகளில் மணப்பதை பயணிகள் சுவைத்து தெரிந்துகொள்ளலாம்.

மேலும், இங்கு உள்ளூர் தயாரிப்புகளாக பலவகை கைவினைப்பொருட்கள், மரக்குடைவு பொருட்கள், மரப்பொம்மைகள், கலம்காரி ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் சந்தன பொம்மைகள் போன்றவை ஏராளமாக கிடைக்கின்றன. ரசனை மிக்கவர்கள் இவற்றில் ஏதாவதொன்றை வாங்காமல் ஊர் திரும்புவதில்லை.

பயண வசதிகளும் பருவநிலையும்:

திருப்பதிக்கு பயணம் மேற்கொள்வது மிக எளிதாகவே உள்ளது. நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ரேணிகுண்டாவில் திருப்பதிக்கான உள்நாட்டு விமான நிலையம் உள்ளது.
டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னையிலிருந்து இந்த விமானநிலையத்துக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன. தற்போது இதனை வெளிநாட்டு சேவைகளை இயக்குவதற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
மேலும், முக்கிய போக்குவரத்து வசதியாக திருப்பதியில் பிரத்யேக ரயில் நிலையமும் உள்ளது. எல்லா முக்கிய இந்திய நகரங்களிலிருந்தும் இந்த ரயில்நிலையத்துக்கு இணைப்புகள் உள்ளன.
அது மட்டுமல்லாமல் பெங்களூர், ஹைதராபாத், வைசாக் மற்றும் அருகிலுள்ள சென்னை நகரத்திலிருந்து ஏராளமான பேருந்துகள் அடிக்கடி திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன.
ஏறக்குறைய தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் இங்கு வருவதற்கு பேருந்து வசதிகள் உள்ளன. திருப்பதி நகரின் முக்கிய ஆன்மீக ஸ்தலங்கள் மற்றும் இதர அம்சங்களை சுற்றிப்பார்க்க வாடகைக்கார்கள் மற்றும் உள்ளூர் தேவஸ்தான பேருந்துகள் அதிக அளவில் கிடைக்கின்றன. குறைந்த கட்டணத்தில் நாள் வாடகைக்கும் டாக்சிகளை பயணிகள் அமர்த்திக்கொள்ளலாம்.



Leave a Comment