மேன்மை தரும் மதுரை மீனாட்சி
மதுரை மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லால் ஆனது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ராஜமாதங்கி சியாமளா சக்தி பீடம் ஆகும். தேவியின் பெயர் தமிழில் அங்கயற்கண்ணி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப்போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறாள். தல விருட்சமாக கடம்ப மரமும் தீர்த்தங்களாக பொற்றாமரைக் குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி ஆகியவை உள்ளன. மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை, கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் அமைகின்றன. வேண்டும் வரமெல்லாம் அருளும் அன்னையாக மீனாட்சி விளங்குகிறாள். இங்குள்ள இறைவன் சொக்கநாதரை வணங்கினால் மனதுக்கு அமைதியும், நிம்மதியான முக்தியும் கிடைக்கும்.
Leave a Comment