திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
தொடர் விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைலமோதுகிறது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக தரிசனத்துக்கு அனுப்பப்படுகின்றனர். நேற்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 61 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 15 மணி நேரத்துக்கு மேல் ஆனதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.300 கட்டணத்தில் பதிவு செய்த பக்தர்களுக்கு 4 மணி நேரமும், ஸ்ரீவாரிமெட்டு மற்றும் அலிபிரி மலைப்பாதை வழியாக திவ்ய தரிசன டோக்கன் பெற்று வந்தவர்களின் தரிசனத்துக்கு 3 மணி நேரமும் ஆனது. கோடைவிடுமுறை தொடங்க உள்ள நிலையில் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையான் கோவில் உள்ள திருமலைக்கு செல்வதற்காக திருப்பதி-திருமலை இடையே தொடர்ந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
Leave a Comment