சபரிமலை நடை திறப்பு
மாசி மாத பூஜைக்காக பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு முன்னிலையில் கோவில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பிப்ரவரி 13-ந்தேதி 17-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். 13 ஆம் தேதி முதல் சுவாமி ஐயப்பனுக்கு கணபதி ஹோமம், புஷ்பாபிஷேகம், நெய் அபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். மேலும் அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை போன்றவைகளும் நடைபெறும். அனைத்து பூஜைகளும் முடிவடைந்த பிறகு 17-ந்தேதி இரவு 10 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படும்.
Leave a Comment