ஐயப்பனுக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது....


சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 15-ந்தேதி நடை திறக்கப்பட்டது. கோவில் நடை திறக்கப்பட்ட நாள் முதல் திரளான பக்தர்கள் இருமுடி கட்டி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மண்டல பூஜையின்போது அணிவிக்கப்படும் சுவாமி ஐயப்பன் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டது. திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, சபரிமலை ஐயப்பனுக்கு 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை காணிக்கையாக வழங்கி உள்ளார். அந்த தங்க அங்கிஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜையின் போது, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். இந்த தங்க அங்கியானது, பத்தனம்திட்டை மாவட்டம் ஆரன்முளாவில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். இந்த ஆண்டு மண்டல பூஜையையொட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.



Leave a Comment