சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறிது. சுமார் 15 மணி நேரம் காத்திருந்த பிறகே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிகிறது. மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த மாதம் 15-ந்தேதி நடை திறக்கப்பட்டது. நடைதிறக்கப்பட்ட நாள் முதலே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழகம், கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் அதிகளவு சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சுமார் 15 மணிநேரம் காத்திருந்த பிறகுதான் பக்தர்களால் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. பம்பையில் இருந்தே பக்தர்களை கட்டுப்படுத்தி வரிசையில் அனுப்பும் நிலை ஏற்பட்டது. இதனால் போலீசார் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். சபரிமலையில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. மண்டல பூஜை நெருங்குவதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும். இதனால் சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
Leave a Comment