திருப்பதியில் இனி ஆதார் கட்டாயம்!
திருப்பதி திருமலையில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அதார் அட்டை கட்டாயமாக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு உலகில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். சுவாமி தரிசனத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க பக்தர்கள் விஐபி டிக்கட் பெற்றுக்கொண்டு ஏழுமலையானை தரிசிக்க செல்வார்கள். இதுவரை விஐபி தரிசன டிக்கெட்டை பெறுவதற்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், அல்லது குடும்ப அட்டை இதில் ஏதாவது ஒன்றை காண்பித்தால் போதும். ஆனார் இந்த முறையில் மாற்றம் கொண்டு வர திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி 1 முதல் விஐபி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் கையில் அதார் அட்டையை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் முன் பதிவு செய்பவர்களும் ஆதார் அட்டை பிதிவு செய்தே இனி முன்பதி செய்ய முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Comment