சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்...


சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவாக சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபாடு.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் திருநாளான இன்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக பாலசுப்ரமணியருக்கு சிறப்பு ஆராதனை நடந்தேறியது.  

முருகப்பெருமான் வீரபாகுவுடன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. இதில் முதலாக, யானை முகம் கொண்ட தாரகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார். இதையடுத்து சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார். பின்னர் தன் முகம் கொண்ட சூரபத்மனை வதம் செய்தார்.

தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்த சூரபத்மனை வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி முருகப்பெருமான் தன் வாகனமாக ஆட்கொண்டார். இந்த சூரசம்ஹார விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டனர்.



Leave a Comment