காரியாபட்டி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா


காரியாபட்டி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 5-ம் நாள் யாகசாலை சிறப்பு பூஜை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 5-ம் நாளான இன்று வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் வள்ளி,தெய்வனை, சுப்பிரமணியசுவாமிக்கு பால், தயிர், பன்னீர், திருமஞ்சனம், இளநீர், சந்தனம், மஞ்சள், அரிசிமாவு, தேன், பஞ்சாமிர்தம், விபூதி உட்பட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட கலசத்துடன் முருகனுக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது. பின்பு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணிய சுவாமிக்கு லட்சதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment