சிறப்பு மலர் அலங்காரத்தில் ஓம் என்று காட்சி அளித்த திருத்தணி முருகன்...
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி ஐந்தாம் நாள் நிகழ்வில் சிறப்பு மலர் அலங்காரத்தில் ஓம் என்று வருவது போல் காட்சி பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோயில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி இலட்சார்ச்சனை திருவிழா நவம்பர் இரண்டாம் தேதி பூஜை உடன் தொடங்கியது.
இன்று ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் மூலவர் முருகப்பெருமானுக்கு இரண்டு மணி நேரம் சிறப்பு பூஜை, அபிஷேகம், பக்தர்கள், இன்று நடைபெற்றது கோவில் கதவுகள் மூடப்பட்டது. தனைத் தொடர்ந்து உற்சவர் சண்முகப் பெருமான் காவடி மண்டபத்தில் எழுந்தருளிய அவருக்கு இலட்சார்ச்சனை வில்வ இலை அர்ச்சனை நடைபெற்றது.
சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் ஓம் என்ற வடிவில் புஷ்ப மாலை அணிவிக்கப்பட்டு ரம்மியமான முறையில் பக்தர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாளை ஆறாம் நாள் கந்தசஷ்டி நாளில் உற்சவர் சண்முக பெருமாளுக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி வண்ண மலர்களால் 3 டன் மலர்களைக் கொண்டு நிகழ்ச்சி திருக்கோயிலில் காவடி மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் முருகப்பெருமானுக்கு நடைபெறும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Leave a Comment