திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்....
திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி நிகழ்ச்சி சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது. நவம்பர் 8-ஆம் தேதி உற்சவர் முருகப் பெருமானுக்கு பக்தர்களுக்கு முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு மறுநாள் முதல் கந்த சஷ்டி விழா, 7 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு இன்று 02-ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்குகிறது.
தினமும் அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உற்சவா் சண்முகருக்கு மலைக்கோயில் காவடி மண்டபத்தில் லட்சாா்ச்சனையும் நடைபெற்று. வெள்ளி கவச அலங்காரத்தில் மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நவம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு மலைப்பகுதியில் உற்சவர் முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் நவம்பர் 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு மலைக் கோவிலின் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது இந்நிகழ்ச்சியில் கந்த சஷ்டி விரதம் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Leave a Comment