இலஞ்சி குமாரர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றம்...
தென்காசி மாவட்டம் இலஞ்சி குமாரர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இலஞ்சி குமாரர் கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்ச்சை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழாவானது இன்று அதிகாலை காலை 5 மணி கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து சுவாமிக்கு பலவேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து சிவாச்சாரியர்களின் முன்னிலையில் வேதமந்திரங்கள் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து மகா தீப ஆராதனையும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி வீதி உலா மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. நவம்பர் 7-ம் தேதி மாலை 5 மணி அளவில் சூரசம்கார விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 9-ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் பத்தாம் தேதி தீர்த்த வாரியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Comment