தீபாவளி பண்டிகையை ஒட்டி கௌரி அம்மன் ஊர்வலம்....
ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கௌரி அம்மன் ஊர்வலமாக சென்று நீரோடையில் கரைத்த கிராம மக்கள் தாரை தப்பட்டை மானாட்டம் மயிலாட்டம் முழங்க பட்டாசு வெடித்து இளைஞர்கள் மகிழ்ந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புதுமின்னூர் பகுதியில் தீபாவளி பண்டிகை நாளில் கிராம மக்கள் ஒன்றிணைந்து அப்பகுதியில் உள்ள கௌரி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு நோன்பு படைத்தல் நிகழ்ச்சி வருடா வருடம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்று இரவு பெண்கள் அதிரசம் பழங்கள் பூஜை பொருட்கள் மற்றும் பட்டாசுகள் உள்ளிட்டவைகளை சீர்வரிசையாக கொண்டு சென்று அம்மனுக்கு படைத்து வழிபட்டனர் பின்னர் ஆலயத்தின் முன்பு ஒன்றாக இணைந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளி கலசத்தில் கௌரி அம்மன் முகம் பொருத்தி புத்தாடை மற்றும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வழிபட்டனர் பின்னர் தாரை தப்பட்டை , மானாட்டம் மயிலாட்டம் கோலாட்டத்துடன் இளைஞர்கள் பட்டாசு வெடித்து அம்மனை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள நீரோடையில் கரைத்து வழிபட்டனர்.
Leave a Comment