நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாணம்
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் கோலகலமாக நடைபெற்றது.ஆயிரகணக்காண பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வைபவம் இன்று அதிகாலை கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்தது.
இந்த விழாவிற்காக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் மனக்கோலத்தில் எழுந்தருளினார். அதன்பின்னர் நெல்லை கோவிந்தர் மாப்பிள்ளை அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி நெல்லையப்பரை சுவாமி சன்னதியில் இருந்து மேள தாளம் முழங்க தங்க பல்லக்கில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அழைத்து வந்தார்.
அதனை தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு திருக்கல்யாண சடங்குகள் செய்யபட்டு மாலை மாற்று வைபவம் நடைபெற்றது.பின்னர் சுவாமி நெல்லையப்பரிடம் வைத்து பூஜை செய்யப்பட்ட திருமாங்கல்யம் காந்திமதி அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாடச உபச்சார மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி அம்பாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் ஆறுமுக நயினார் சன்னதியில் திருக்கல்யாண விருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது இந்த விழாவின் தொடர்ச்சியாக சுவாமி அம்பாள் பூம் பல்லாக்கில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Leave a Comment