ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு....


ஆனைமலையில் அமைந்துள்ள மாசாணி அம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துச் செல்வது வழக்கம்.

அவ்வாறு வரும் பக்தர்கள் இக்கோயிலில் மிளகாய் அரைத்து வழிபடுவது சிறப்பு அம்சமாகும். இந்நிலையில் ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில்  14 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.இதற்காக கடந்த சில மாதங்களாக கோயில் வளாகத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் 9 45 மணிக்குள்  நடைபெறும் என அறங்காவலர் நிர்வாகிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த கும்பாபிஷேகத்தில் சுமார் 4 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்காக கூடுதல் வேலைபாடுகள் நடைபெற்று வருவதாக கோயில் நிர்வாகத்தினர் 5.30 மணி அளவில் தெரிவித்துள்ளனர்.

இதற்காக இன்று கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் தலைமையில்  நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர் உறுப்பினர்கள் மஞ்சுளாதேவி,மருதமுத்து, திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Leave a Comment