சொக்கலிங்கபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ உச்சினிமகாளி அம்மன், சக்தி விநாயகர், பெருமாள் சுவாமி, ஸ்ரீ சுடலை மாட சுவாமி சகிதாய பரிவார மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாவித்து வருகின்றனர். இக்கோவிலில் திருப்பணிகள் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது மற்றும் மூன்றாவது யாகசாலை பூஜைகள், வேத பாராயணம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு இன்று காலையில் நான்காம் கால யாகசாலை பூஜை கோபுர கும்பாபிஷேகம், ஸ்ரீ முத்தாரம்மன் மற்றும் பரிவாரம்பிகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகாதீபாராதனை மகேஸ்வர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Leave a Comment