பௌர்ணமி அன்று இதையெல்லாம் செய்தால் வாழ்க்கை மாறுவது நிச்சயம்!


பௌர்ணமி மற்றும் அமாவாசை ஆன்மீகத்தில் மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக  கருதப்படுகிறது. அன்றைய தினம் இறை வழிபாடு செய்வதன் மூலமாக நல்ல அதிர்வலைகள் உண்டாகும்.

திதி நித்யா தேவிகளில்  கடைசி நித்யாவாக கருதப்படும் ஸ்ரீ லலிதாம்பிகைக்குரிய திதி பௌர்ணமி. இந்த பௌர்ணமி திதியில் லலிதா சகஸ்ரநாமம் ஜெபிப்போருக்கு வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம்.

பௌர்ணமியில் அம்மன் வழிபாடு!

பௌர்ணமி அன்று மாலை வேளையில் திருவிளக்கு பூஜை செய்தால் குடும்ப ஒற்றுமை அதிகரிப்பதோடு, வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெறலாம்.

பௌர்ணமி நன்னாளில் மந்திர ஜெபம் செய்பவர்களுக்கு அதீத சக்தி உண்டாகும். மேலும், புதிதாக மந்திர ஜெபம் தொடங்குபவர்களுக்கும் விரைவில் சித்தி உண்டாகும்.

குலதெய்வ வழிபாடு

பௌர்ணமி திதியில் குலதெய்வ வழிபாடு செய்வது மிக முக்கியமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் தொலைதூரத்தில் உள்ள குலதெய்வ கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள், தங்கள் இல்லங்களில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

பௌர்ணமி கிரிவலம்

பௌர்ணமி திதியில் கிரிவலம் செய்தால்சிவபெருமானின் அருளினால்நேர்மறை ஆற்றல் உண்டாகும். இத்தனை சிறப்புடைய பௌர்ணமி நாளில் செய்யப்படும் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக எந்த ஒரு காரியத்தையும் தூங்குவதற்கு ஏற்ற நாளாக இந்த பௌர்ணமி கருதப்படுகிறது.



Leave a Comment