மகிஷாசுரனை வதம் செய்த தாய் படவேட்டம்மன்...
ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவிலில் மகாவிஸ்வரூப தரிசனம் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவிலில் புரட்டாசி மாகாளிய அமாவாசை மறுதினத்தில் இருந்து நவராத்திரி கொலு ஒன்பது நாள் வழிபடுவர். அந்த வகையில் ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவிலில் 46 ஆம் ஆண்டு கோவிலின் தர்மகத்தா வடிவேலு தலைமையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. நவராத்திரி ஒன்பது நாளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஸ்ரீ தாய் படவேட்டம்மன் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவற்றை காண ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து ஸ்ரீ தாய் படவேட்டம்மனை தரிசித்து வந்தனர்.
அந்த வகையில் ஒன்பதாம் நாள் அரக்கன் மகிஷாசுரன் வதம் செய்யும் நாளாகவும் பராசக்தி வெற்றி அடைந்த நாளாகவும் கொண்டாடும் வகையில் மகிஷாசூரன் மரமாக உறுமாரியதை கோவிலின் முன்பு வாழைமரத்தை வாழைதாருடன் கூடிய வாழைப்பூ மரத்தை நடப்பட்டு ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவில் வாசலில் 20 அடிக்கும் மேலாக காணப்பட்ட வாழைமரத்திற்க்கு பூஜைகளும் தீபாரதனைகளும் செய்யப்பட்டு மரமாக காட்சியளிக்கும் மகிஷாசுரனை வதம் செய்யும் காட்சியை ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் திரண்டு இருந்து கண்டுகளித்தனர்.
இதனை தொடர்ந்து ஸ்ரீ தாய் படவேட்டம்மனின் மகா விஸ்வரூப தரிசனம் மேற்கொண்டு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பித்து வழிபட்டனர் இதில் பக்தர்கள் பொதுமக்கள் அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர்.
Leave a Comment