பழனி முருகன் கோயிலில் வன்னிகாசூரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சி...


பழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வன்னிகாசூரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கானக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பழனி முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான நவராத்திரிவிழா கடந்த 3 ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி பத்து நாட்களாக விமர்சையாக கொண்டாடப்பட்டுவந்தது. நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வன்னிகாசூரனை அம்பு எய்து அழிக்கும் நிகழ்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கோதைஈஸ்வரர் கோயில் முன்பு நடைபெற்றது.

முன்னதாக மலைக்கோயிலில் பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. மலைக்கோயிலில் இருந்து பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது.  பழநி ஆதினம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் கோயில் நிர்வாகம் தேவதா மரியாதையுடன் பல்லக்கில் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி கோதைமங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பழநி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் துர்க்கையாக ஆவாஹனமாகி வாழைமரம் மற்றும் வன்னி மரத்தில் அம்பெய்து வன்னிகாசூர வதம் செய்யும் நிகழ்வு நடந்தது.

நவராத்திரி விழா நிகழ்ச்சியில் அயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பழனி முருகன் கோயிலில் 13 ம் நூற்றாண்டில் இருந்து நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. தீய குணம் கொண்ட  வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியை காண வரும் பக்தர்கள் தங்கள் மனதில்  உள்ள தீய எண்ணங்களும் அழிந்து போவதாக நம்புவதால் ஆண்டு தோறும் நவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.



Leave a Comment