தென்திருப்பதி வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம்.....


கரூர் தென்திருப்பதி என அழைக்கப்படும் தாந்தோணிமலை வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள தென்திருப்பதி என அழைக்கப்படும் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்றதுமான கல்யாண வெங்கடமண சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனை ஒட்டி புரட்டாசி மாதத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் பலர் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு செல்வது வழக்கம்

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி கடந்த நான்காம் தேதி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது இதனை அடுத்து திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை கோவில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதனை அடுத்து தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனை அடுத்து அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கோயில் சுத்தம் செய்யப்பட்டு பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

இதனை அடுத்து நீண்ட வரிசையில் பக்தர்கள் பெருமாளை கண்டு களித்து வழிபட்டு சென்றனர் மேலும் கோவில் தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனை ஒட்டி கோவில்களில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது மேலும் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அன்னதானத் துவங்கி வைத்தார்.



Leave a Comment