ஆண்டாள் சூடி களைந்த மாலைகள் திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்...


திருப்பதி ஏழுமலையானுக்கு நாளை பிரம்மோற்சவ கருட வாகன புறப்பாடு உள்ள நிலையில்,  இந்து தர்மர்த்த சமிதி திருக்குடைகள்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாயார் மலர்மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கருட வாகன புறப்பாடு நாளை இரவு நடைபெற உள்ளது. முன்னதாக நாளை காலை ஏழுமலையானின் மோகினி அலங்கார புறப்பாடும் நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான நாளை தமிழ்நாட்டில் தொடர்புடைய இந்த இரண்டு புறப்பாடுகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மோகினி அலங்கார புறப்பாட்டில் உற்சவருக்கு அலங்கரிக்க தேவையான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாருக்கு சூட்டி களையப்பட்ட மலர் மாலைகள், மலர் ஜடை, இலைகளால் செய்யப்பட்ட பச்சைக்கிளி ஆகியவை திருப்பதி மலைக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

 நாளை இரவு திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் கருட வாகன புறப்பாட்டில் அலங்கரிக்க தேவையான வெண்பட்டு திருக்குடைகளை சென்னையை சேர்ந்த இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை அதன் அறங்காவலர் ஆர்.ஆர் கோபாலஜி தலைமையில் திருப்பதி மலைக்கு கொண்டு வந்திருந்த நிலையில் அவற்றை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

 



Leave a Comment