ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி 4 ஆம் நாள் துர்கை அம்மன் அலங்காரம்...


வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி 4 ஆம் நாள் துர்கை அம்மன் அலங்காரம் செய்து மகாதீபாராதனைகள் நடந்தது  இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர் ஆன்மிக இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று நவராத்திரி விழா  4 ஆம் நாளான இன்று அம்மனுக்கு , துர்கை அம்மன் அலங்காரம் செய்து  குங்கும லட்ச்சார்ச்சணைகளும் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகங்களும் நடந்தது.

பின்னர் மகாதீபாராதனைகளும் நடந்தது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர் பின்னர் ஆன்மிக பாரம்பரிய இசைகலைநிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் மாணவ,மாணவிகள் பங்கேற்று இசைகருவிகளை இசைத்தும் ஆன்மிக பாடல்களையும் பாடினார்கள் இதனை மக்கள் கண்டு ரசித்தனர்.



Leave a Comment